வட இந்தியாவில் 'தங்கலான்' - தேதியை அறிவித்த படக்குழு

'தங்கலான்' திரைப்படம் வட இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
வட இந்தியாவில் 'தங்கலான்' - தேதியை அறிவித்த படக்குழு
Published on

சென்னை,

பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கேல்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. கடந்த 15-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

இப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தெரிகிறது.  'தங்கலான்' திரைப்படம் வட இந்தியாவில் இந்தியில் வெளியாகாமல் இருந்தநிலையில், படக்குழு போஸ்டர் வெளியிட்டு இந்தியில் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 30-ம் தேதி 'தங்கலான்', வட இந்தியாவில் வெளியாக இருக்கிறது.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com