'தங்கமே உன்னத்தான்'...நயன்தாரா மகன்கள் பாடும் வீடியோ வைரல்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
'Thangame Unnathan'... Video of Nayanthara sons singing goes viral
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண வீடியோ மற்றும் நயன்தாரா சிறுவயது வாழ்க்கை முதல், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்கள் அனைத்தும் ஆவணப்படமாக எடுக்கப்பட்டது.

இதில் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த 18-ந் வெளியானது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது இவர்கள் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், இரு மகன்களும் நானும் ரவுடிதான் படத்திலுள்ள 'தங்கமே உன்னத்தான்' என்ற பாடலில் வரும் வரிகளை திரும்ப திரும்ப கூறுவதை காண முடிகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com