'நன்றி தனுஷ்' -நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி


Thank you Dhanush - Actor Arun Vijay
x

'இட்லி கடை' படத்தில் அருண்விஜய்யின் தோற்றத்தை படக்குழு இன்று வெளியிட்டது.

சென்னை,

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நித்யாமேனன் ,அருண்விஜய் , ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகிறது. 'இட்லி கடை' படத்தில் அருண்விஜய்யின் தோற்றத்தை படக்குழு இன்று வெளியிட்டது. அந்த போஸ்டரில் நடிகர் அருண் விஜய் குத்துச் சண்டை வீரராகவும், அவரது உதவியாளராக தனுஷ் நிற்பது போன்றும் உள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்து அருண் விஜய் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்தேன். இப்படத்தில் நடிப்பதை நினைத்தால் சுவாரஸ்யமாக உள்ளது. அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஒரு அற்புதமான எண்டர்டெயின்மெண்ட் படத்தில், உங்களுடன் திரையை பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னை வீட்டில் இருப்பதைப் போலவே உணரச் செய்ததற்கு நன்றி தனுஷ்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story