’அந்த படம் என்னை ரொம்ப பாதித்தது.. 3 நாட்கள் தூக்கமே வரல’ - மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
’அந்த படம் என்னை ரொம்ப பாதித்தது.. 3 நாட்கள் தூக்கமே வரல’ - மாரி செல்வராஜ்
Published on

சென்னை,

பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்தனர். 

சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய மாரி செல்வராஜ், ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் தன்னை தூங்கவிடவில்லை என்று கூறினார். அவர் பேசுகையில்,

'ஹோம்பவுண்ட்' திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு நாள் முழுவதும் நான் யாரிடமும் பேசவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அந்தப் படம் இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com