'அதுதான் எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் படம்'.. ஜேசன் சஞ்சய் எதை சொன்னார் தெரியுமா?

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

'அதுதான் எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் படம்'.. ஜேசன் சஞ்சய் எதை சொன்னார் தெரியுமா?
Published on

சென்னை,

நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநராக அறிமுகமாக உள்ள ஜேசன் சஞ்சய், தனது முதல் திரைப்படமான 'சிக்மா' (Sigma) வெளியாகவுள்ள நிலையில், தனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

'சிக்மா' மூலம் இயக்குநராக அறிமுகம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சிய விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக மாறியுள்ளார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தீப் கிஷன் நடிப்பில் 'சிக்மா' என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

'கேஜிஎப்' தான் பேவரைட்

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த பேட்டியில் பேசிய ஜேசன் சஞ்சய், நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' (KGF) திரைப்படம்தான் தனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் படம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த படம் தனது கமர்ஷியல் சினிமா பற்றிய புரிதலையே மாற்றியதாகவும், இதுவரை அதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு மாஸ் திரைப்படத்தை தான் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள்

'கேஜிஎப்' படத்தை தனது மிகவும் பிடித்த கமர்ஷியல் திரைப்படமாக ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டிருப்பது, சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இயக்குநராக அறிமுகமாகும் நிலையில் அவர் பகிர்ந்த இந்த கருத்து, அவரது திரைப்பட ரசனையையும், கமர்ஷியல் சினிமா மீதான பார்வையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com