``ஜனநாயகன் படத்தின் முக்கிய கருத்தே அதுதான்'' - பிக்பாஸ் பிரபலம் பிரஜின்

‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய கருத்து குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தவறான தொடுதல் (Good Touch Bad Touch)பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம் பிரஜின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், “எல்லா இடங்களிலும் பெண்களுக்கு தவறுகள் நடந்து வருகின்றன. பெண்கள் தைரியமாக அதை பற்றி பேச வேண்டும். ஜனநாயகன் படத்தின் முக்கிய கருத்தே நல்ல தொடுதல், தவறான தொடுதல் (Good Touch Bad Touch) பற்றி தான். நாம் குழந்தைகளுக்கு இதை பற்றி சொல்லி தர வேண்டும்’’ என்றார்.
‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பிரஜினின் இந்த கருத்து படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story






