என் திரை பயணத்தின் மிகப்பெரிய தவறு அது- நடிகர் கவுதம் ராம் கார்த்திக் பேச்சு

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் தற்போது மனு ஆனந்த் இயக்கிய 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
என் திரை பயணத்தின் மிகப்பெரிய தவறு அது- நடிகர் கவுதம் ராம் கார்த்திக் பேச்சு
Published on

சென்னை,

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். அதனை தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின. இவர் தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார். அதாவது, "முத்துராமலிங்கம் கதைக்காக நான் வருத்தப்படுகிறேன். என் பயணத்தின் மிகப்பெரிய தவறு அது. அறிவின்மையாலும் புரிதலற்ற தன்மையாலும் இப்படம் என் வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரிய தோல்வியாக அமைந்துவிட்டது.

அதன்பின், இந்த மாதிரியான பாணி படங்களை முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். ஒருகட்டத்தில் மீண்டும் முயற்சி செய்யலாம் என அதற்குப் பொருத்தமான இயக்குநர் முத்தையா மூலம் தேவராட்டத்தில் நடித்தேன். இருந்தும், இப்போதும் இப்படியான மாஸ் படங்களில் நடிப்பதில் எனக்கு பயம் இருக்கிறது" என்றார்.

ராஜா துரை ராஜ் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘முத்துராமலிங்கம்’. பிரியா ஆனந்த், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியையே பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com