'அப்படித்தான் கெரியரை ஆரம்பித்தேன்' - நடிகை மாளவிகா சர்மா

சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் குறித்து மாளவிகா சர்மா பேசினார்.
'அப்படித்தான் கெரியரை ஆரம்பித்தேன்' - நடிகை மாளவிகா சர்மா
Published on

சென்னை,

தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா நடித்த காபி வித் காதல் படத்தில் நடித்தவர் மாளவிகா சர்மா. தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் குறித்து மாளவிகா சர்மா அளித்துள்ள பேட்டியில், "நான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. கல்லூரி நாட்களில் மாடலாக எனது கெரியரை ஆரம்பித்தேன். விளம்பரங்களில் நடித்தேன். அதுவே சினிமா வாய்ப்பை பெற்று தந்தது.

தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடித்த நேல டிக்கெட் படம் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தேனோ அதை பிரதிபலிப்பதுபோல் இருந்தது. காபி வித் காதல் படம் மூலம் தமிழ்திரை உலகில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நடித்துக் கொண்டே ஒருபுறம் எல்.எல்.பியும் முடித்து விட்டேன். பகுதிநேர வக்கீலாகவும் பணியாற்றினேன்.

எனக்கு கதக் நடனம் தெரியும். வளர்ப்பு பிராணிகள் பிடிக்கும். இயற்கையை நேசிக்கிறேன். சமூக சேவைகளிலும் ஆர்வம் உண்டு. ஒரு பள்ளிக்கு சென்று ஏழை குழந்தைகளுக்கு செருப்பு வாங்கி அவர்கள் காலில் அணிவித்து மகிழ்ந்தேன். தமிழ், தெலுங்கில் நல்ல பட வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com