'ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்கள் புகழ் பெற காரணம் அதுதான்' - ராம் கோபால் வர்மா

பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் கதைகளில் தென்னிந்திய திரைப்படத் துறை கவனம் செலுத்துவதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறினார்.
சென்னை,
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி.ஆர், ராஜ்குமார் போன்ற தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சனின் பாலிவுட் படங்களின் ரீமேக்குகளில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றதாக பழம்பெரும் திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறினார்.
சமீபத்திய பேட்டியில் வர்மா இதை பற்றி பேசினார். அவர் கூறுகையில், "70கள் மற்றும் 80களில், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 தென்னிந்திய திரைப்படத் துறைகளும் அமிதாப் பச்சனின் படங்களை ரீமேக் செய்தன.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி. ராமராவ் மற்றும் ராஜ்குமார் போன்ற நட்சத்திரங்கள் இந்த ரீமேக்குகளில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றனர். தென்னிந்திய திரைப்படத் துறை பெரும்பாலும் பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் கதைகளில் கவனம் செலுத்துகிறது'' என்றார்.
Related Tags :
Next Story






