2026 ஆஸ்கர் விருதுகள் விழா தொடங்கியது

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘வெப்பன்ஸ்’ படத்தில் நடித்த ஏமி மேடிகன் பெற்றுள்ளார்.
2026 ஆஸ்கர் விருதுகள் விழா தொடங்கியது
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சினிமா உலகில் தலைசிறந்த விருதாக ‘ஆஸ்கர் விருது’ கருதப்படுகிறது. இந்த விருதினை பெறுவது உலகெங்கும் திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.

அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை கொனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த விழாவின் முதல் விருதாக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, ‘வெப்பன்ஸ்’(Weapons) படத்தில் நடித்த ஏமி மேடிகனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது ‘கே-பாப் டிமன் ஹண்டர்’(K-Pop Demon Hunter) படத்திற்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது ‘தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்’(The Girl Who Cried Pearls) குறும்படத்திற்கும் வழங்கப்பட்டது.

போர் சூழலுக்கு மத்தியில் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா நடைபெறும் டால்பி தியேட்டருக்கு வரும் விருந்தினர்கள் பல கட்ட சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஆஸ்கர் விழாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com