சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியானது...!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியானது...!
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் நிறைவு செய்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் 2-வது லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 'கங்குவா' படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com