இணையத்தில் வைரலாகும் 'கிளாடியேட்டர் 2' படத்தின் 2-வது டிரெய்லர்

'கிளாடியேட்டர் 2' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
The 2nd trailer of 'Gladiator 2' is going viral on the internet
Image Courtecy: Instagram@paulmescalpics
Published on

வாஷிங்டன்,

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும், இது ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. போர்க்கள காட்சிகளுக்கு இன்றளவும் முன்னோடியாக இப்படம் விளங்குகிறது. தற்போது வெளியான 'கேம் ஆப் திரோன்ஸ்' மற்றும் 'பாகுபலி' போன்ற படங்களிலும் இந்த படத்தின் தாக்கத்தை காண முடியும்.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் முதல் டிரெய்லர் கடந்த ஜூலை மாதம் வெளியானநிலையில், தற்போது 2-வது டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஐரோப்பிய திரையரங்குகளிலும் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் 22-ந் தேதி அமெரிக்காவிலும் வெளியாகிறது. 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com