ஆலியா பட் நடித்த ‘ஆல்பா’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது

இந்த படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆலியா பட் நடித்த ‘ஆல்பா’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது
Published on

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது இயக்குனர் ஷிவ் ராவில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பலிம்ஸ் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு பல்வேறு யுனிவர்ஸ் திரைப்படங்களை உருவாக்கி வந்த யாஷ் ராஜ் நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘ஆல்பா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூலை 3-ல் உலகம் முழுவதும் வெளியீடு

முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ஆல்பா’ திரைப்படம், சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெளியான அதிரடி டிரெய்லர்

இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடி மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஆலியா பட்டின் அதிரடி தோற்றமும், படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com