நடிகையின் இடுப்பை கிள்ளிய விவகாரம் - மன்னிப்புக் கேட்ட நடிகர்


The actor apologized for behaving inappropriately towards the actress on stage.
x

பொது மேடையில் நடிகர் பவன்சிங், நடிகையின் இடுப்பை கிள்ளிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

சென்னை,

லக்னோவில் பொது மேடையில் நடிகை அஞ்சலி ராகவின் இடுப்பை கிள்ளிய விவகாரத்தில் போஜ்புரி நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபல நடிகரான பவன்சிங் சமீபத்தில் நடிகை அஞ்சலி ராகவுடன் பொது வெளியில் நடந்த படவிழாவில் பங்கேற்றார். அப்போது நடிகை அஞ்சலி பேசி கொண்டிருந்த போது திடீரென அவரது இடுப்பை பவன்சிங் தொட்டார்.

இதனால் சிரித்தபடி அஞ்சலி திரும்பி பார்த்தார். மீண்டும் பவன்சிங் அஞ்சலி இடுப்பை தொட்டார். இதனால் உள்ளே சங்கடமாக உணர்ந்தாலும் அஞ்சலி வெளியே சிரித்துக் கொண்டே காணப்பட்டார். லக்னோவில் நடந்த 'சாயா சேவா கரே' பாடலுக்கான விளம்பர நிகழ்வில் இந்த சம்பவம் நடந்தது.

பொது மேடையில் பவன்சிங் நடிகையின் இடுப்பை கிள்ளிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை அஞ்சலி, போஜ்புரி திரையுலகில் இருந்தே வெளியேறுவதாக தெரிவித்தார். இந்நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, தனது செயல் அஞ்சலியை பாதித்திருந்தால் மன்னித்துவிடுமாறு நடிகர் பவன் சிங் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story