சாலை விபத்தில் சிக்கிய 'கில்லி' பட நடிகர்


சாலை விபத்தில் சிக்கிய கில்லி பட நடிகர்
x

சாலையை கடக்கும் போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி காயமடைந்தார்.

பிரபல வில்லன் நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் "கில்லி, பாபா, பகவதி, ஏழுமலை, மாப்பிள்ளை, உத்தம புத்திரன்" உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமின்றி, தன்னம்பிக்கை பேச்சாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது இரண்டாவது மனைவி ரூபாலி பருவாவுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் தங்கியிருந்த ஹோட்டல் அருகே சாலை விபத்தில் சிக்கினார். மனைவியுடன் சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து ஆஷிஷ் வித்யார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விபத்து நடந்தது உண்மைதான். எனக்கு பெரிய காயம் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். என் மனைவிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்களுக்குத் தெரியப்படுத்தவே இதைச் சொல்கிறேன். இதை பரபரப்பாக்க வேண்டாம். விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் குறித்தும் விசாரித்தேன். அனைவரும் நலமாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story