பாரிஸ் கலவரத்தில் சிக்கிய நடிகை

பாரிஸ் கலவரத்தில் சிக்கிய நடிகை
Published on

தமிழில் தி லெஜண்ட் படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் ஊர்வசி ரவுத்தலா பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க பாரிஸ் சென்றார். அங்கு சிறுவனை போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்து வரும் வன்முறை மற்றும் கலவரத்தில் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து ஊர்வசி ரவுத்தலா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாரிசில் நடந்து வரும் கலவரமும், வன்முறை சம்பவங்களும் கவலை அளிக்கிறது. பயமாகவும் உள்ளது. என்னுடன் வந்த குழுவினரின் பாதுகாப்பு நிலையை நினைத்து வருந்துகிறேன். இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரும் எங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றனர்.

நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்கிறோம். பாரிஸ் அழகான நாடு. இங்கு இப்படி வன்முறை சம்பவங்கள் நடப்பது கவலை அளிக்கிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com