அஸ்வினியை கொன்ற இதயம் இல்லாத அசுரன் - நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம்

அஸ்வினியை கொன்றவன் இதயம் இல்லாத அசுரன் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
அஸ்வினியை கொன்ற இதயம் இல்லாத அசுரன் - நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம்
Published on

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் என்ன விஷயம் சொன்னாலும் அதனை வலைத்தளத்தில் சிலர் கேலி செய்து வருகிறார்கள். அவதூறாகவும் பேசுகிறார்கள்.

இது காயத்ரி ரகுராமுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை தரக்குறைவாக பேசுபவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று எச்சரித்து இருந்தார். இந்தநிலையில் சென்னை கே.கே.நகரில் கல்லூரி மாணவி அஸ்வினியை காதல் விவகாரத்தில் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அழகேசன் என்பவர் கழுத்தை அறுத்து கொன்றதை காயத்ரி ரகுராம் கண்டித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இளம்பெண் அஸ்வினியை காதல் மிரட்டல் என்ற பெயரில் இதயமும் அறிவும் இல்லாத அசுரன் கொலை செய்துள்ளான். அஸ்வினி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com