விமான பயணத்தில் ரஜினியுடன் செல்பி எடுத்த நடிகை

விமான பயணத்தில் ரஜினியுடன் செல்பி எடுத்த நடிகை
Published on

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு கொச்சியில் நடக்கிறது. படப்பிடிப்புக்கு சென்ற ரஜினிகாந்தை நடிகை அபர்ணா பாலமுரளி விமானத்தில் சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை வலைத்தளத்தில் அவர் பகிர அது வைரலாகி வருகிறது. அபர்ணா பாலமுரளி ஏற்கனவே "ரஜினியின் தீவிர ரசிகை நான்" என்று தெரிவித்து இருக்கிறார். ரஜினி வீட்டின் முன்னால் நின்று செல்பி எடுத்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் விமான பயணத்தில் ரஜினியை அருகில் சந்திக்கும் வாய்ப்பினால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி அவரோடு செல்பி எடுத்து வெளியிட்டு உள்ளார்.

அபர்ணா பாலமுரளி, தமிழில் சூர்யா ஜோடியாக சூரரைப் போற்று படத்தில் நடித்து தேசிய விருது வாங்கியவர். 8 தோட்டாக்கள், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com