கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நடிகை - மீம்ஸ் போட்டு ரசிகர்கள் எதிர்ப்பு

கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நடிகைக்கு, ரசிகர்கள் மீம்ஸ் போட்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நடிகை - மீம்ஸ் போட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
Published on

நடிகைகள் சமீப காலமாக கவர்ச்சி உடையில் வலம் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு செல்லும்போது கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த படங்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்கள். வெளிநாட்டு ஆடை நாகரிகத்தை இந்தியாவுக்குள் பரப்புவதில் இந்தி நடிகைகள்தான் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள் என்கின்றனர்.

மும்பையில் நடக்கும் பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையிலேயே வருகிறார்கள். ஆடை அலங்கார அணிவகுப்புகளிலும் எல்லை மீறிய கவர்ச்சியில் தெரிகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா அணிந்த புதிய ஜீன்ஸ் பேண்ட் இப்போது சமூக வலைத்தளத்தில் பரவி ரசிகர்களை அதிர வைத்து உள்ளது. அந்த ஜீன்ஸ் பேண்ட் அதிகம் கிழிந்து இருந்தது. இதனால் மலைக்கா அரோராவை ரசிகர்கள் மீம்ஸ் ஆக்கி கலாய்த்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இப்படி மோசமான உடை அணியலாமா? என்று சிலர் கண்டித்து உள்ளனர். மலைக்கா அரோராவும் இந்தி நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது. அர்ஜுன் கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர். இருவரும் ரகசியமாக காதலை வளர்த்து வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com