ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை.... இணையத்தில் வைரலாகும் கனகாவின் புகைப்படம்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை கனகாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை.... இணையத்தில் வைரலாகும் கனகாவின் புகைப்படம்
Published on

90 களின் காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை கனகா. இவர் சக்திவேல்,பெரிய குடும்பம்,செந்தூரதேவி என 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மறைந்த பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகளான கனகா 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின் சினிமாவை விட்டு விலகியுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கனகாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே என இனையவாசிகள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com