தாய்மையை அனுபவிக்க குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லை...சர்ச்சையாக பேசிய நடிகை

எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று பிரபல கன்னட நடிகை ஹிதா சந்திரசேகர் கூறினார்.
image courtecy:instagram@thehithaceee
image courtecy:instagram@thehithaceee
Published on

சென்னை,

சினிமா துறையில் இருப்பவர்கள் சொல்லும் கருத்துகள் சிலநேரம் சர்ச்சையாகி விடுவது உண்டு. அப்படி ஒரு சிக்கலில் மாட்டி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் பிரபல கன்னட நடிகையான ஹிதா சந்திரசேகர்.

இவர் 2019-ல் கிரன் சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் நிகழ்ச்சியொன்றில் குழந்தை இல்லாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து ஹிதா சந்திரசேகர் கூறும்போது, ''எங்களுக்கு குழந்தைகள் தேவையில்லை. நானும் கிரனும் நண்பர்களாக இருந்தபோதே குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டோம்.

எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. எனக்கு இந்த உலகத்தை பிடிக்கவில்லை. அப்படி இருக்கும்போது இன்னொரு குழந்தையை இந்த உலகத்திற்கு எதற்காக கொண்டு வர வேண்டும்.

என்னைப் போலவே எனது கணவரும் யோசிக்கிறார். தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லை. நாய்க்குட்டியை கூட சொந்த குழந்தைபோல வளர்த்துக் கொள்ளலாம்.

அதற்காக யாரும் குழந்தை பெற வேண்டாம் என்று சொல்வது எனது கருத்து அல்ல. இது எனது முடிவு'' என்றார்.

ஹிதா சந்திரசேகர் கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி அவரை பலரும் விமர்சித்தும் கேலி செய்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com