விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!

விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!
Published on

சென்னை,

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை 2024-ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் 'வாராய் ரத்னம்' என்ற பாடல் நாளை (1.1.2024) காலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com