'சந்திரமுகி-2' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!

'சந்திரமுகி-2' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'சந்திரமுகி-2' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!
Published on

சென்னை,

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஸ்வாகதாஞ்சலி' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் 'சந்திரமுகி-2' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'மோருனியே' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை எஸ்.பி.சரண் மற்றும் ஹரிகா இணைந்து பாடியுள்ளனர். இதனை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com