'நந்தன்' தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை - நடிகர் சூரி

நடிகர் சூரி 'நந்தன்' படக்குழுவினரை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'நந்தன்' தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை - நடிகர் சூரி
Published on

சென்னை,

'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 'அயோத்தி' வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான 'கருடன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதற்கிடையில் சசிகுமார் நடித்துள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தை பார்த்த நடிகர் சூரி அவரது எக்ஸ் தளத்தில் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதில் 'படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது, நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை! என்றும் அன்புள்ள சரவணன் அண்ணனுக்கும், சசிகுமார் அண்ணனுக்கும், ஜிப்ரான் தம்பிக்கும், நந்தன் குழுவினருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்' என்றும் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com