ஷாருக்கான் மகன் இயக்கும் வெப் தொடர்...பர்ஸ்ட் லுக் வெளியீடு


The Ba**ds Of Bollywood - Makers drop first look of Aryan Khans directorial debut show
x
தினத்தந்தி 17 Aug 2025 12:45 PM IST (Updated: 17 Aug 2025 12:48 PM IST)
t-max-icont-min-icon

இந்த வெப் தொடரின் மூலம் ஆர்யன் கான் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சென்னை,

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த வெப் தொடர் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டநிலையில், தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்தத் தொடர் எதை பற்றியது என்பதைப் தெரிவிக்கும் வகையில், வருகிற 20 அன்று முன்னோட்டம் வெளியாக உள்ளது.

பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும், ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ஆலியா பட், சாரா அலி கான், இப்ராஹிம் அலி கான், எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் கரண் ஜோஹர் ஆகியோர் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story