நடிகர் விஜய்சேதுபதி கடந்த 6-ந் தேதி தமிழக காவல்துறை ஏற்பாடு செய்த செல்போன் திருட்டை கண்டுபிடிக்கும் டிஜிகாப் என்ற மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது காவல் துறைக்கும் பொது மக்களுக்குமான இடைவெளி இந்த டிஜிகாப் செயலி மூலம் குறையும் என்று பேசினார்.