“என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர்” - நடிகை யாஷிகா புகார்

தன்னை ஒரு பெரிய டைரக்டர் படுக்கைக்கு அழைத்ததாக நடிகை யாஷிகா புகார் தெரிவித்துள்ளார்.
“என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர்” - நடிகை யாஷிகா புகார்
Published on

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா. துருவங்கள் பதினாறு, நோட்டா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மீ டூ இயக்கம் குறித்து கருத்து தெரிவித்த யாஷிகா பெரிய டைரக்டர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன். எல்லா துறைகளில் உள்ள பெண்களுக்கும் பாலியல் தொல்லையை சந்தித்த அனுபவம் இருக்கும். எனக்கும் அது நடந்து இருக்கிறது. பட வாய்ப்புக்காக பெரிய டைரக்டரை சந்திதேன். அவர் புகழ் பெற்ற நடிகரின் அப்பா மாதிரி. நடிப்பு திறைமையை சோதித்தார். அதன்பிறகு என்னை வெளியே அனுப்பினார். எனது அம்மாவிடம் பட வாய்ப்புக்கு பதிலாக என்னை அவரது படுக்கைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் நேரடியாக கேட்டு இருந்தால் புகார் செய்து இருப்பேன். பொது இடத்தில் ஒருவர் என் பின்னால் தட்டி பாலியல் ரீதியாக சீண்டினார். அந்த இடத்திலேயே அவரை அடித்தேன். என் வீடு அருகில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார். அதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நின்ற பெண்ணிடம் போலீஸ்காரர் ஒருவர் உன் ரேட் என்ன என்று கேட்பதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த பெண் நான்தான். அதுகுறித்தும் புகார் செய்தேன்.

இவ்வாறு யாஷிகா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com