படமாகும் ''ஆபரேஷன் சிந்தூர்'' முரளி நாயக்கின் வாழ்க்கை வரலாறு

இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
சென்னை,
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் (22) வீரமரணம் அடைந்தார். இந்நிலையில், ''ஆபரேஷன் சிந்தூர்'' ஹீரோ முரளியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது.
பிக் பாஸ் புகழ் கவுதம் கிருஷ்ணா இதில் முரளி நாயக்காக நடிக்கிறார். கே. சுரேஷ் பாபு இந்த படத்தை விஷான் பிலிம் பேக்டரியின் கீழ் தயாரிக்கிறார்
இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்தியா அளவில் உருவாகிறது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படம் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் அறிவிப்பின்போது கவுதம் கிருஷ்ணா பல கருத்துக்களைத் தெரிவித்தார். நம்நாட்டு மக்களுக்காக வீர மரணம் அடைந்த முரளி நாயக்கின் கதையை உலகிற்குச் சொல்ல இந்த படம் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார். இது நாட்டையே பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் என்றும், முரளி நாயக்கின் வேடத்தில் நடிப்பது தனக்கு அதிர்ஷ்டம் என்றும் கூறினார்.






