‘நிர்வாண காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம்...’ - மனம்திறந்த ஹாலிவுட் நடிகை

இளம் நடிகைகள் சிலர் பயத்தால் எதுவும் பேசாமல் இருந்துவிடுவார்கள் என ஜெனிபர் லாரன்ஸ் கூறியுள்ளார்.
‘நிர்வாண காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம்...’ - மனம்திறந்த ஹாலிவுட் நடிகை
Published on: 

வாஷிங்டன்,

நடிகை ஜெனிபர் லாரன்ஸ் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

நிர்வாண காட்சிகள்

சினிமாவைப் பொறுத்தவரை கதைக்கு தேவை என்ற பட்சத்தில் நடிகர், நடிகைகள் துணிச்சலான காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. இருப்பினும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சினிமாவில் நிர்வாண காட்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளிலும், பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும் கடுமையான தணிக்கை விதிகள் இருக்கின்றன.

கலாசார வேறுபாடுகள்

அதே சமயம், ஹாலிவுட் திரைப்படங்கள், பிரெஞ்ச் மொழிப் படங்கள் போன்றவற்றில் நிர்வாண காட்சிகள் இடம்பெறுவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. அங்கு நிர்வாணமாக நடிப்பது கலையின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படுகிறது. சில ஐரோப்பிய நாடுகளில் சினிமா மட்டுமின்றி மேடை நாடகங்களிலும் நடிகர், நடிகைகள் ஆடையின்றி தோன்றுவது உண்டு. இத்தகைய காட்சிகளை ஏற்றுக்கொள்வதற்கும், மறுப்பதற்கும் கலாசார வேறுபாடுகளே முக்கிய காரணமாக இருக்கிறது.

ஹாலிவுட் திரையுலகை பொறுத்தவரை பல முன்னணி நடிகர், நடிகைகளும் தயங்காமல் நிர்வாண காட்சிகளில் நடிக்கின்றனர். அதே சமயம், சில நடிகர், நடிகைகள் தாங்கள் வளர்ந்த கலாசாரத்திற்கு பொருந்தாது என்பதால் அத்தகைய காட்சிகளுக்கு ‘நோ’ சொல்லி விடுகின்றனர்.

கசப்பான அனுபவம்

இதில் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப துணிச்சலான காட்சிகளில் தயங்காமல் நடித்து வருகிறார். அவரது திரைப்பயணத்தில் நிர்வாண காட்சிகளிலும் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில், அத்தகைய காட்சி ஒன்றில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஒரு காட்சியில் ஆடையின்றி நடிக்க வேண்டியிருந்தது. பொதுவாக அதுபோன்ற காட்சிகளை படமாக்கும்போது, மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். ஆனால் அந்த சமயம் அங்கு தேவையில்லாம சிலர் நின்று கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கண்டிப்பு அவசியம்

ஆனால் நான் அமைதியாக இருக்கவில்லை. தேவையில்லாத நபர்களை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினேன். நான் அவ்வாறு கூற காரணம், எனக்கே இந்த நிலை என்றால், 18 வயதில் திரைத்துறைக்கு வரும் ஒரு இளம்பெண் எத்தகைய கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்?

ஏதாவது பேசினால் நம்மை ஓரம்கட்டிவிடுவார்கள் என்ற பயத்தால் இளம் நடிகைகள் எதுவும் பேசாமல் இருந்துவிடுவார்கள். எனவே, ஒரு மூத்த நடிகையாக நான் இந்த விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

‘கேம் ஆப் திரோன்ஸ்’ நடிகை

இதே போல், ‘கேம் ஆப் திரோன்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்ற நடிகை எஸ்மே பியாங்கோ, தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில், “நான் ஆடையின்றி நடிக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. அந்த படப்பிடிப்பு தளத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று நினைத்தேன்.

ஆனால் எனக்கு பின்னால் 3 ஆண்டுகள் ஒரு கொடியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். நான் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தேன். அதனால் நான் மிகவும் எரிச்சலடைந்து அவர்களை அங்கிருந்து வெளியே செல்லுமாறு கூறினேன். அதன் பிறகே அந்த காட்சி படமாக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

X