ஒரு காலத்தில் ரெயிலில் பாடிய சிறுவன்...இப்போது பிரபல நடிகர்...யார் தெரியுமா?

இவர் பல ரூ. 100 கோடி வசூல் படங்களைக் கொடுத்திருக்கிறார்.
The boy who once sang on the train...now a famous actor...do you know who he is?
Published on

சென்னை,

சாதாரண ஒரு மனிதருக்கு சினிமா உலகில் சிறந்து விளங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் சினிமா துறையில் தனது முத்திரையை பதித்திருக்கிறார். பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

பல ரூ. 100 கோடி வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல...ஆயுஷ்மான் குரானாதான். சண்டிகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆயுஷ்மான் குரானா, விக்கி டோனர், ஆர்டிகல் 15, தும் லகா கே ஹைஷா, பதாய் ஹோ, அந்தாதுன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமல்ல, பிரபல பாடகரும் கூட. பானி டா ரங், சத்தி காலி, நைனா டா கியா கசூர் போன்ற பல பாடல்களை அவர் பாடியுள்ளார். முன்பு, தனது படத்தை விளம்பரப்படுத்தும்போது, ஆயுஷ்மான் தனது நண்பர்களுடன் ரெயில்களில் பாடல்களைப் பாடியதை நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில், ''எனது கல்லூரி நாட்களில், டெல்லியிலிருந்து மும்பைக்கு 'பஷ்சிம் எக்ஸ்பிரஸ்' என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில், நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒவ்வொரு பெட்டியாக பாடி நிகழ்ச்சி நடத்துவோம். பயணிகள் எங்களுக்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து நாங்கள் கோவாவுக்கு சுற்றுலா சென்றோம்'' என்றார்.

ஆயுஷ்மான் தற்போது ''தாமா'' என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். இதில், ராஷ்மிகா மந்தனா, பரேஷ் ராவல் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா சர்போத்தார் இயக்கியுள்ள இந்தப் படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.

View this post on Instagram

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com