'தி பாய்ஸ்' - கடைசி சீசனின் டிரெய்லர் வெளியீடு

'தி பாய்ஸ்' தொடரின் 5-வது மற்றும் கடைசி சீசன் உருவாகி வருகிறது.
சென்னை,
ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஹாலிவுட் வெப் தொடர்களில் ஒன்று 'தி பாய்ஸ்'. இந்த தொடரில் இருந்து கடைசியாக 4-வது சீசன் வெளியானது. இதில் வரும் பெரும்பாலான சூப்பர் ஹீரோக்கள் கருப்பு பக்கங்களை உடையவர்களாக உள்ளனர். மது, மாது, சூது என வாழும் இந்த சூப்பர் ஹீரோக்களால் பாதிக்கப்படும் சாமானியர்கள் ஒன்றுகூடி அவர்களை எதிர்த்து போராடுவதுதான் கதை.
இது சிறந்த இணையதொடருக்கான பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. இதன் தொடர் அமேசான் பிரைம் ஓ.டி.டியில் தமிழில் உள்ளது. தற்போது, இதன் 5-வது மற்றும் கடைசி சீசன் உருவாகி வருகிறது.
இதில், டேவிட் டிக்ஸ், கார்ல் அர்பன், ஜாக் குவைட், ஆண்டனி ஸ்டார், எரின் மோரியார்டி, ஜெஸ்ஸி டி. அஷர், லாஸ் அலோன்சோ, சேஸ் கிராபோர்ட், டோமர் கபோன், கரேன் புகுஹாரா, கோல்பி மினிபை உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இத்தொடர், அடுத்தாண்டு ஏப்ரல் 8-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இதன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.






