Image Credits: Twitter.com/@kjr_studios
Image Credits: Twitter.com/@kjr_studios

அயலான் படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்... யார் யாரெல்லாம் பார்க்கலாம்...?

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை துபாயில் வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏலியன் கதைக்களத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்த படத்திலிருந்து 'வேற லெவல் சகோ' என்ற பாடல் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகியிருந்தது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு' தர சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்த படத்தை அனைத்து வயதினரும் எந்த தடையும் இன்றி பார்க்கலாம் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் டிரைலர் இன்று மாலை துபாயில் வெளியாக உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com