"டியூட்" படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள "டியூட்" படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
"டியூட்" படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படக்குழு 'டியூட்' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று மாலை 06.03 மணியளவில் இப்படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com