“மதராஸி” படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
“மதராஸி” படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மதராஸி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோவை கூலி படத்தின் இடைவெளியின் போது வெளியிடப்பட்டு வருகிறது.

மதராஸி படத்தின் முக்கிய அப்டேட் படக்குழு வெளியிட உள்ளது. அதாவது, மதராஸி படத்தின் டிரெய்லர் அல்லது இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பினை இந்த வாரத்தில் படக்குழு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மதராஸி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com