சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'எஸ்கே21' படத்தின் டைட்டில் டீசர் வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com