ரசிகர்களை மிரட்ட வரும் 'தி டார்க் ஹெவன்'.. உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது

இந்த படத்தில் சித்து மற்றும் ரித்விகா நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள், கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ரசிகர்களை மிரட்ட வரும் 'தி டார்க் ஹெவன்'.. உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது
Published on

சென்னை,

உலகம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை முதல் தி டார்க் ஹெவன் திரைப்படம் திரைக்கு வருகிறது . இந்த படம் திரில்லர் கிரைம் விரும்பும் ரசிகர்கள் தாண்டி அனைத்து தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும் தரமான படமாக இருக்கும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'தி டார்க் ஹெவன்'

கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பாலாஜி இயக்கியுள்ள புதிய படம், 'தி டார்க் ஹெவன்'. சின்னத்திரையில் பிரபலமான சித்து கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார். பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் ரித்விகா, தர்ஷிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சரண், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மர்மமான முறையில் தொடரும் கொலைகள்

உலகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திரைக்கு வர உள்ள 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் குறித்து படக்குழுவினர்

கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்குப் பின் வரும் ஜூன் மாதத்தில் மர்மமான முறையில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்கின்றன எந்த தடயமும் இல்லாமல் நடந்துவரும் இந்த தொடர் கொலைகள் கிராமத்து மக்களை பீதியில் ஆழ்த்துகிறது.

இந்த மர்ம மரணம் குறித்து போலீஸ் அதிகாரி சித்து விசாரணையில் களம் இறங்குகிறார். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அந்த உண்மைகள் என்ன? தொடர்ந்து நிகழ்ந்து வரும் மர்ம மரணங்களுக்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கிறது.

நடிப்பில் வெளுத்து வாங்கிய சித்து, ரித்விகா

சித்து, ரித்விகா, தர்ஷிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள் கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஏனைய கதாபாத்திரங்களும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மணிகண்டனின் ஒளிப்பதிவும், சக்தி பாலாஜியின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே தயாராகி உள்ளது.

அனைத்து தரப்பினரும் விரும்பும் படம்

இந்த படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த அத்தனை பேரும் இந்த படம் சிறப்பான படம் என்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பருத்திவீரன் சரவணன், நட்டி நட்ராஜ், கவுரவ் என முக்கிய திரை பிரபலங்களும், பிரபலங்களும் இந்த இந்த படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுவே இயக்குனருக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை முதல் தி டார்க் ஹெவன் திரைப்படம் திரைக்கு வருகிறது . இந்த படம் திரில்லர் கிரைம் விரும்பும் ரசிகர்கள் தாண்டி அனைத்து தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும் தரமான நல்ல படங்களை அங்கீகரிக்க ரசிகர்கள் தவறுவது கிடையாது அது எந்த படத்திலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். இந்த நல்ல படத்துக்கு ஆதரவு தருமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம், என்று படகுழுவினர் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com