மறைந்த நடிகை சிந்துவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்

மறைந்த நடிகை சிந்துவின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றினார்.
Published on

சென்னை,

'அங்காடித்தெரு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிந்து, கடந்த 7-ந்தேதி தனது இல்லத்திலேயே காலமானார். அவருக்கு வயது 42. அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவரது அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது. தாய் சிந்துவின் ஆசைப்படி அக்னி தீர்த்தக்கடலில் அவரது மகள் அஸ்தியை கரைத்தார். இறந்த தாய் சிந்துவின் ஆன்மா சாந்தியடைவதற்கு தேவையான பரிகாரங்களையும் அவர் மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com