"ஜனநாயகன் வரும் நாளே பொங்கல்.."- விஜய்க்கு நடிகர் ஜெய் ஆதரவு குரல்

தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட உள்ளது.
"ஜனநாயகன் வரும் நாளே பொங்கல்.."- விஜய்க்கு நடிகர் ஜெய் ஆதரவு குரல்
Published on

சென்னை,

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து, படம் மறுஆய்வுக் குழுவின் பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால், இன்று (ஜனவரி 9-ஆம் தேதி) வெளியாகவிருந்த ஜனநாயகன் படம், சொன்ன தேதியில் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ஜெய் விஜய்க்கு ஆதரவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எப்போதும் உங்களை தடுக்க தடைக்கற்கள் நிரம்பிக்கிடக்கின்றன; அதை உடைத்தெறிந்து வருவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. எல்லாரை போல் ரசிகனாக, தம்பியாக `ஜனநாயகன்' வரும் நாளே `பொங்கல்' என காத்திருக்கிறேன் அண்ணா.." என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com