“சக்தித் திருமகன்” படத்தில் இயக்குனர் நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளார் - இயக்குனர் சங்கர்

விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ படம் கடந்த 24ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த மாதம் ‘சக்தித் திருமகன்’ என்ற படம் வெளியானது. விஜய் ஆண்டனி தயாரித்திருந்த இந்த படத்தை அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'பத்ரகாளி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிப்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.
அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஊழலுக்கு எதிராக, ஒரு தனி மனிதனின் பழிவாங்கல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ‘சக்தித் திருமகன்’ படம் கடந்த 24ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில், ‘சக்தித் திருமகன்’ படத்தை பாராட்டி இயக்குநர் சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “சக்தித் திருமகன் படத்தை ஓடிடியில் பார்த்தேன். சிந்தனையை தூண்டக்கூடிய படமாக இருந்தது. நிறைய விஷயங்கள் குறித்து பேசி, நியாயமான கேள்விகளை இயக்குநர் எழுப்பியுள்ளார். எதிர்பாராத வகையில் கதையின் தீவிரம் கூடிக்கொண்டே சென்றது. இயக்குநர் அருண் பிரபு, நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.






