'அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்ட இயக்குனர்.. எப்போது தெரியுமா?

'அஞ்சான்' படத்தை ரீ-எடிட் செய்து வெளியிட இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.
'அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்ட இயக்குனர்.. எப்போது தெரியுமா?
Published on

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான படம் 'அஞ்சான்'. இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் சார்பில் லிங்குசாமி இதனை தயாரித்திருந்தார். இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அஞ்சான் படத்தின் ரீ ரிலீஸ் குறித்து இயக்குனர் லிங்குசாமி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, இந்த படத்தை இந்தியில் வாங்கி ரீ-எடிட் செய்து, யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இந்தி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தி பதிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அஞ்சான் படத்தை தமிழில் ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com