தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த 'ஜன நாயகன்' பட இயக்குனர்

இயக்குனர் எச்.வினோத் தற்போது விஜய்யின் ''ஜனநாயகன்'' படத்தை இயக்கி வருகிறார்.
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த 'ஜன நாயகன்' பட இயக்குனர்
Published on

சென்னை,

''சதுரங்க வேட்டை'' படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எச். வினோத். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, ''நேர்கொண்ட பார்வை'', ''வலிமை'',''துணிவு, ''தீரன் அதிகாரம் ஒன்று'' போன்ற நல்ல படங்களை கொடுத்து சினிமாவில் பிரபலமானார்.

தற்போது இவர் விஜய்யின் ''ஜனநாயகன்'' படத்தை இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இயக்குனர் எச்.வினோத் புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமாரை தொடர்ந்து இவரும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளது வரவேற்க தக்க விஷயமாகும். இவர் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை 'மகளிர் மட்டும்' பட இயக்குனர் பிரம்மா இயக்க உள்ளதாகவும், திரைக்கதையை வினோத் எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com