புத்தாண்டை முன்னிட்டு 'ஸ்பிரிட்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குனர்

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா “ஸ்பிரிட்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் படம் "ஸ்பிரிட்". இதில் நடிகர் பிரபாஸ் ஒரு போலீஸ்காரராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
மேலும், “ஸ்பிரிட்”-ல் பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா “ஸ்பிரிட்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






