தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக வரும்: ரசிகர் கூறியதை கேட்டு திரிஷா கொடுத்த ரியாக்‌ஷன்

நடிகை திரிஷா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார்.
தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக வரும்: ரசிகர் கூறியதை கேட்டு திரிஷா கொடுத்த ரியாக்‌ஷன்
Published on

திருப்பதி,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை திரிஷா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். கோவில் வளாகத்தில் அவர் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர், "மேடம், ரிசல்ட்டு பக்கா மனதே"(இன்று ரிசல்ட் பக்காவா நம் பக்கம்தான்) என்று சொல்ல, பதிலுக்கு புன்னகைத்த முகத்துடன் திரிஷா நடந்து சென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com