

தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்பட உலகங்களில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் ரசிகர்களின் கவனத்தை பெற்ற அவர், தமிழில் கொடி படத்தின் மூலம் நுழைந்தார்.
பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பைசன்” படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான “லாக் டவுன்” திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் பரவி வருவது குறித்து அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். “நடிகைகளின் போலி ஆபாச படங்களை திட்டமிட்டு வெளியிடுகின்றனர். இதுபோன்ற விஷம ஆசாமிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கேடுகெட்ட செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் இத்தகைய கேவலமான விஷயங்கள் முற்றிலும் ஒழியும்,” என்று அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.