பிரபல நடிகரின் கார் ஓட்டுனர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்

பிரபல இந்தி திரைப்பட நடிகர் வருண் தவானின் கார் ஓட்டுனர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
பிரபல நடிகரின் கார் ஓட்டுனர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்
Published on

புனே,

பிரபல இந்தி திரைப்பட நடிகர் வருண் தவான். இவரது கார் ஓட்டுனராக பணியாற்றியவர் மனோஜ் சாகு. இந்த நிலையில், பந்திரா நகரில் மெஹ்பூப் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில் தவான் கலந்து கொண்டார். இதற்காக தவானை படப்பிடிப்பு தளத்திற்கு மனோஜ் காரில் அழைத்து சென்று விட்டுள்ளார்.

இந்த நிலையில், தவானின் கார் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், உடனடியாக அவரை லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நீண்ட நேரம் மருத்துவமனையில் இருந்த தவான், அதன்பின் காரில் புறப்பட்டார். முக கவசம் அணிந்தபடி மருத்துவமனையில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

இதனை, வருணின் நிர்வாக குழு சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளது. தவானின் குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரிய ஓட்டுனராக பல ஆண்டுகளாக மனோஜ் இருந்து வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com