'ஜன நாயகன்' படத்தில் பாடிய பிரபல ராப் பாடகர்

எச்.வினோத் இயக்கிவரும் 'ஜன நாயகன்' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
'ஜன நாயகன்' படத்தில் பாடிய பிரபல ராப் பாடகர்
Published on

சென்னை,

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை பிரபல ராப் பாடகரான ஹனுமான்கைன்ட் என்பவர் பாடியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஹனுமான்கைன்ட் என்பவர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபலமான ஹிப்ஹாப் பாடகர் ஆவார். இவர் சில மாதங்களுக்கு முன் 'பிக் டாக்ஸ்' என்ற ஆல்பம் பாடலை அவரே எழுதி இசையமைத்து வெளியிட்டார். அந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 'ரன் இட் அப்' என்ற பாடலை வெளியிட்டார். தற்போது இந்த பாடலும் இணையத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com