ரஜினி பின்னால் ஓடிய ரசிகர்களால் பரபரப்பு

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியை ரசிகர்கள் சூழ்ந்தனர்
ரஜினி பின்னால் ஓடிய ரசிகர்களால் பரபரப்பு
Published on

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துவிட்டு மாலத்தீவு பகுதிக்கு சுற்றுலா சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தார். கடற்கரையில் நடந்து சென்ற புகைப்படங்கள் வெளியானது. தற்போது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவரோடு செல்பி எடுக்க முண்டியடித்தனர். காரில் ஏறச்சென்ற அவரை பின்னால் துரத்திச் சென்றும் செல்பி எடுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்திவிட்டு ரஜினியை அனுப்பி வைத்தனர். ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com