4கே தரத்தில் மீண்டும் வெளியாகும் 'அமைதிப்படை' திரைப்படம்

மணிவண்ணன் இயக்கிய 'அமைதிப்படை' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
4கே தரத்தில் மீண்டும் வெளியாகும் 'அமைதிப்படை' திரைப்படம்
Published on

மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘அமைதிப்படை’. வெளியான நேரத்தில் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் ரஞ்சிதா, கஸ்தூரி, ஆர். சுந்தராஜன், சுஜாதா, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தயாரிப்பாளர் பாலச்சந்திரன் தயாரித்த இப்படத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சூழலில், ‘அமைதிப்படை’ திரைப்படமும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை 4கே தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மிக விரைவில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com