ரசிகர்களின் தொடர் கேள்விகளுக்கு பதில்... 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...!

இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரசிகர்களின் தொடர் கேள்விகளுக்கு பதில்... 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...!
Published on

சென்னை,

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும்படி பலரும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டு உள்ளனர். அதன்படி இந்த படம் வருகிற 25ம் தேதி உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com