'லவ்வர்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

'லவ்வர்' திரைப்படம் கடந்த 9-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது.
'லவ்வர்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
Published on

சென்னை,

குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 9-ம்தேதி திரையரங்குகளில் வெளியான 'லவ்வர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் 'லவ்வர்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com